/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு 'மிமிக்ரி' செய்தது கண்டிக்கத்தக்கது'
/
'எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு 'மிமிக்ரி' செய்தது கண்டிக்கத்தக்கது'
'எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு 'மிமிக்ரி' செய்தது கண்டிக்கத்தக்கது'
'எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு 'மிமிக்ரி' செய்தது கண்டிக்கத்தக்கது'
ADDED : டிச 11, 2024 06:57 AM
சேலம்: சேலத்தில், பா.ஜ.,வின் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகளுடன், தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைமை தேர்தல் பார்வையாளர் நளின்குமார் கட்கில், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
தொடர்ந்து, மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறியதாவது: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை போல், 'மிமிக்ரி' செய்து நடித்து காட்டி எள்ளி நகையாடியது, சபையின் ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. கண்டிக்கத்தக்கது. இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டிய முதல்வர், அந்நிகழ்வை ரசித்துள்ளார்.
'டங்ஸ்டன்' சுரங்கத்தை, மத்திய அரசு தொடங்காது என தெரிந்து கொண்டு, அப்படி வந்துவிட்டால், நான் பொறுப்பில் இருக்கமாட்டேன் என, ஸ்டாலின் சவடால் விட்டுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை தெரிந்து முதல்வர், நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். ஊழல் செய்து வரும், தி.மு.க.,வுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், அவர்களுக்கு, பா.ஜ., ஆதரவு அளிக்கும். தி.மு.க.,வை அகற்றுவதே, பா.ஜ., குறிக்கோள். அதனால், அக்கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
நலிந்துவிட்ட கைவினை தொழில்களை மீண்டும் புதுப்பிக்க கொண்டு வரப்பட்ட விஸ்வகர்மா திட்டத்துக்கு, தி.மு.க., ஜாதி முலாம் பூசி விட்டது. தி.மு.க., நடவடிக்கையால் கிராம பொருளாதாரம் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.