/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து
/
மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து
மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து
மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 23, 2024 03:50 AM
ஆத்துார்: தென்னை மரங்கள் ஏற்றி வந்த மினி லாரியின் டயர் வெடித்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாழப்பாடி அருகே, பேளூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்று தென்னை மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு, மினி லாரியில் ஆத்துார் வழியாக, நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். நெய்வேலி, காட்டுக்கூடலுாரை சேர்ந்த டிரைவர் வேல்முருகன், 42, ஓட்டி சென்றார். நேற்று, மதியம், 3:30 மணியளவில் ஆத்துார் அருகே, கொத்தாம்பாடி வழியாக சென்றபோது, மினி லாரியின் முன்பக்க டயர் வெடித்துள்ளது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியினர், மினி லாரிக்குள் சிக்கியிருந்த டிரைவரை மீட்டனர். சிறு காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்தின்போது, வேறு வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆத்துார் ஊரக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

