/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது மினி லாரி மோதல் சிறுமி பலி; 3 பேர் படுகாயம்
/
பைக் மீது மினி லாரி மோதல் சிறுமி பலி; 3 பேர் படுகாயம்
பைக் மீது மினி லாரி மோதல் சிறுமி பலி; 3 பேர் படுகாயம்
பைக் மீது மினி லாரி மோதல் சிறுமி பலி; 3 பேர் படுகாயம்
ADDED : அக் 14, 2024 04:50 AM
சேலம்: பைக் மீது மினி லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தார். அவரது பெற்றோர் உள்பட, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம், வலசையூர், சந்தைப்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன், 26. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கல்பனா, 23. இவர் தன் இரு குழந்தைகளுடன் விருதாசலம் சென்றுவிட்டு பஸ்சில் நேற்று இரவு, 7:30 மணிக்கு அயோத்திப்-பட்டணத்தில் இறங்கினார்.அங்கு, 'ஹீரோ ேஹாண்டா' பைக்கில் காத்திருந்த மணிகண்டன், மனைவி, இரு குழந்தை-களை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.அயோத்தியாப்பட்-டணம் மார்க்கெட் பகுதியில் சென்றபோது எதிரே, சேலம் நோக்கி வந்த மினி லாரி, பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட, 3 வயது சிறுமி ஹர்-சினி உயிரிழந்தார். மணிகண்டன், கல்பனா, 6 வயது மகன் தமிழ்-மாறன் ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டனர். காரிப்பட்டி போலீசார், விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவரான, பரமத்தி வேலுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.