/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கட்சியினருக்கு அமைச்சர் அறிவுரை
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கட்சியினருக்கு அமைச்சர் அறிவுரை
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கட்சியினருக்கு அமைச்சர் அறிவுரை
வாக்காளர் பட்டியல் திருத்த பணி கட்சியினருக்கு அமைச்சர் அறிவுரை
ADDED : அக் 30, 2025 02:28 AM
சேலம்,  சேலத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் வடக்கு சட்டசபை தொகுதிக்கு, ஓட்டுச்சாவடி முகவர்கள், பாக கணினி தொழில்நுட்ப முகவர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டுகள் நீக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். நவ., 1 முதல், ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசார கூட்டங்கள் நடத்தவும், அதில் மாநில நிர்வாகிகள் முதல் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்று, அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்களை களைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். தொகுதி பொறுப்பாளர்கள் விவேக், இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், மாநகர் செயலர் ரகுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மணி, மாநகர் அவைத்தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

