/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுச்சாவடிக்கு 40 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக சேர்க்க அமைச்சர் அறிவுரை

ADDED : ஜூன் 25, 2025 01:53 AM
சேலம், ஓட்டுச்சாவடிக்கு, 40 சதவீத வாக்காளர்களை, உறுப்பினர்களாக சேர்க்க அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.
தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம், தெற்கு சட்டசபை தொகுதியில், 'ஓரணியில் தமிழ்நாடு' தலைப்பில் புது உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை, பகுதி செயலர்களிடம் வழங்கி அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 40 சதவீத வாக்காளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். வீடுதோறும் சென்று அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, உறுப்பினர் சேர்க்கையை நடத்தி, தெற்கு தொகுதியில் கண்டிப்பாக வெற்றிபெற செய்ய வேண்டும்.
2026ல், முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்கும்படி களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், தொகுதி பார்வையாளர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், மாநகர் செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் வடக்கு தொகுதி ஆலோசனை கூட்டம், சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடந்தது. அதிலும் அமைச்சர் ராஜேந்திரன் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.