/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
31 நீர்நிலைகளில் உபரிநீர் நிரப்ப திட்டம் அமைச்சர் தகவல்
/
31 நீர்நிலைகளில் உபரிநீர் நிரப்ப திட்டம் அமைச்சர் தகவல்
31 நீர்நிலைகளில் உபரிநீர் நிரப்ப திட்டம் அமைச்சர் தகவல்
31 நீர்நிலைகளில் உபரிநீர் நிரப்ப திட்டம் அமைச்சர் தகவல்
ADDED : அக் 26, 2025 01:17 AM
மேட்டூர், மேட்டூர் அணை உபரி நீரை, வறண்ட ஏரி, குளங்களுக்கு நீரேற்று நிலையம் மூலம் கொண்டு செல்வதற்கு சாதகமாக உள்ள, கொளத்துார் ஒன்றியம், சின்னமேட்டூர், செட்டிப்பட்டி அணை கரையோர பகுதிகளை, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மேட்டூர் அணை உபரி
நீரை வலதுகரை பகுதியில் இருந்து சேலம் மாவட்டம், கொளத்துார்; ஈரோடு மாவட்டம், அந்தியூர், பவானி பகுதிகளில் உள்ள, 13 நீர்வளத்துறை ஏரிகள், 5 நீர்வளத்துறை, 13 ஒன்றியத்தை சேர்ந்த குளங்கள் என, 31 நீர்நிலைகளுக்கு நீரேற்று நிலையம் அமைத்து குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.
அந்தியூர், பவானி வட்டங்களில், 19, கொளத்துாரில், 5 என, 24 கிராமங்கங்களில் உள்ள, 31 நீர்நிலைங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் உருவாக்கப்படுகிறது.
தோராயமாக, 550.206 மி.கன அடி நீர் தேவை. அதற்கு, 26 நாட்கள் வினாடிக்கு, 250 கனஅடி நீர் எடுக்க வேண்டும். அந்த நீரை, 60 கி.மீ.,க்கு பிரதான குழாய்கள் மூலமாகவும், 250 கி.மீ., நீள கிளை குழாய்கள் வழியாகவும் கொண்டு செல்ல வேண்டும்.
இதன்மூலம், 3,931.56 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 14,051 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பலனடையும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். மக்கள் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
பொருளாதார நிலை உயரும். அதற்கான நிதியை அரசிடம் பெறுவதற்காக விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம், ஈரோடு கலெக்டர்களான பிருந்தாதேவி, கந்தசாமி, எம்.பி.,க்கள் செல்வராஜ், பிரகாஷ், மேட்டூர், அந்தியூர், ஈரோடு கிழக்கு, எம்.எல்.ஏ.,க்கள் சதாசிவம், வெங்கடாசலம், சந்திரகுமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் கோபி, செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

