/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் நாய்கள் கண்காட்சி; அமைச்சர் துவக்கி வைப்பு
/
சேலத்தில் நாய்கள் கண்காட்சி; அமைச்சர் துவக்கி வைப்பு
சேலத்தில் நாய்கள் கண்காட்சி; அமைச்சர் துவக்கி வைப்பு
சேலத்தில் நாய்கள் கண்காட்சி; அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 09, 2024 07:22 AM
சேலம்: 'தி சேலம் அக்மெ கென்னல் கிளப்' சார்பில் அகில இந்திய நாய்கள் கண்காட்சி சேலத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் இருந்து சைபீரியன் ஹஸ்கி, பீகல், ஐரிஷ் செட்டர், டால்மேசன், பெல்ஜியன் ெஷப்பர்ட், ஜெர்மன் ெஷப்பர்ட், சவ்சவ், கோல்டன் ரெட்ரீவர், பொமரேனியன், ராட்வைலர், பக், கிரேட் டேன், செயின்ட் பெர்னார்ட், டாபர்மேன், மினியேச்சர், பின்ஷர், காக்கர் ஸ்பானியல், சலுகி, பூடில், ரொடிஷியன் ரிட்ஜ்பேக், புல்டெரியா வகைகள், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை என, 60 வகை நாய்கள், 300க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்க வைத்தனர்.
அழகு, உடல் கட்டமைப்பு, அதன் நடை, பாவனை, ஓட்டம், சுறுசுறுப்பாக செயல்படுதல், சாகசம் செய்தல், உரிமையாளர் கட்டளைக்கு கீழ்படிதல், உரிமையாளர் பராமரிப்பு போன்ற பல்வேறு திறன் அடிப்படையில் போட்டி நடத்தி, சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்ட நாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கிளப் நிறுவனர் விசு காளியப்பா, செயலர் சாந்தமூர்த்தி, துணைத்தலைவர் நடராஜன், இணை செயலர்கள் மோகன்ராஜ், அண்ணாதுரை செய்திருந்தனர்.