/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.3 கோடியில் திட்டப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
/
ரூ.3 கோடியில் திட்டப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : ஆக 11, 2025 08:23 AM
அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னனுாரில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், துணை சுகாதார மையம் கட்டும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உடையாப்பட்டி, மின்னாம்பள்ளியில் தலா, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார மையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.பின், சின்னகவுண்டாபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். மேலும் அனுப்பூர் முதல் அருநுாற்றுமலை வரை, 1.51 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து, அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில், 4 ஆண்டுகளில், 173.58 கோடி ரூபாய் மதிப்பில், 3,902 வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தினவேல், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் சங்கர், கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

