/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலையில் கழிவு அகற்றும் பணி அமைச்சர் துவக்கிவைப்பு
/
நீர்நிலையில் கழிவு அகற்றும் பணி அமைச்சர் துவக்கிவைப்பு
நீர்நிலையில் கழிவு அகற்றும் பணி அமைச்சர் துவக்கிவைப்பு
நீர்நிலையில் கழிவு அகற்றும் பணி அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : ஜன 26, 2025 03:53 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புக-ளிலும் பிளாஸ்டிக் பைகளை அகற்றி, மறு சுழற்சிக்கு அனுப்பும் பணியை, சேலம், குமரகிரி ஏரி பகுதியில், அமைச்சர் ராஜேந்-திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடரில் நீர், நிலம், காற்று, கடலில் பிளாஸ்டிக் மாசை தடுக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், தமி-ழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, மாதம் ஒரு-முறை பிளாஸ்டிக் கழிவை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மறு சுழற்சியாளர்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சி, 31 டவுன் பஞ்சாயத்து, 20 ஒன்றியங்கள் என, அனைத்து பகுதிக-ளுக்கும் தனித்தனியே பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்-டுள்ளனர். அவர்களின் கீழ் துாய்மை பணியாளர், தன்னார்வலர் என, 7,000 பேர், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், முக்கிய நீர்நிலைகளான ஆறு, ஏரி, குளங்களில் பிளாஸ்டிக் கழிவை சேக-ரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு மாதமும், 4வது சனியன்று, இப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமி-ஷனர் ரஞ்ஜீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

