/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சர் தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
/
அமைச்சர் தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர் தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அமைச்சர் தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 18, 2025 02:27 AM
சேலம், ஈ.வெ.ரா., பிறந்த நாளை சமூக நீதி நாளாக கடைப்பிடித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், கலெக்டர் பிருந்தாதேவி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், கூடுதல் கலெக்டர் பொன்மணி உள்பட, 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதேபோல் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்களும், சேலம் அரசு மருத்துவமனையில் டீன் தேவி மீனாள் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும், சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதேபோல், தி.மு.க.,வின், தாரமங்கலம் நகரம் சார்பில், ஈ.வெ.ரா., பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நகர செயலர் குணசேகரன் தலைமையில் கட்சியினர், ஈ.வெ.ரா., படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.