/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிதாக 4 ரேஷன்கடை திறந்து வைத்த அமைச்சர்
/
புதிதாக 4 ரேஷன்கடை திறந்து வைத்த அமைச்சர்
ADDED : ஜன 29, 2026 04:41 AM

சேலம்: சேலம் மாநகர் பகுதிகளில், 1.79 கோடி ரூபாய் மதிப்பிலான பல்-வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சேலம் அரசு மகளிர் கலைக்கல்-லுாரி அருகே, தொகுதி மேம்பாடு நிதி, 18 லட்ச ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்கூடம், எழில்நகர், 2வது குறுக்கு தெருவில், 24 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை மக்கள் பயன்பாடுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்-ளது. அதேபோல், அஸ்தம்பட்டி இட்டேரி ரோட்டில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேஷன்கடை, வார்டு எண் 15ல், 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன்கடை, வார்டு எண் 14ல், தொங்கும்பூங்கா வளாகத்தின் பின்புற பகுதியில், 17 லட்சம் மதிப்பிலான ரேஷன்கடை, வண்டிபேட்டை அருகே, 15 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரேஷன்கடை என, அடுத்தடுத்து 4 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், அருணாசலம் தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 40 லட்ச ரூபாய் மதிப்பில் இரு வகுப்பறை கட்டடம், 8 வது வார்டில், பாரதிநகர் மாரியம்மன் கோவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், 35 லட்ச ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, மாநகர் பகுதியில் 1.79 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

