/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு

ADDED : நவ 19, 2025 03:39 AM
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 8.60 கோடி ரூபாய் மதிப்பில் புது கட்டடங்களை, அமைச்சர் சுப்பிரமணியன், இன்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அந்த விழாவில் பங்கேற்க, நேற்று மாலை, சேலம் வந்த அவர், மணக்காடு, எஸ்.எம்.சி., காலனியில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையம், குமாரசாமிப்பட்டி, தாதகாப்பட்டியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய பயனாளிகளிடம், மொபைலில் தொடர்பு கொண்டு பேசி, சிகிச்சை முறைகள், மருத்துவர்களின் அணுகுமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் சுக பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரித்த, தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினரை பாராட்டி, தொடர்ந்து அப்பணியை செய்ய கேட்டுக்கொண்டார். அமைச்சர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், நகர்புற சுகாதார திட்ட இயக்குனர் அருண்தம்பு
ராஜ், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.