/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி பறிமுதல் கடத்தியவருக்கு 'காப்பு'
/
ரேஷன் அரிசி பறிமுதல் கடத்தியவருக்கு 'காப்பு'
ADDED : நவ 19, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நசேலம், சின்ன திருப்பதியில், புட்செல் போலீசார், நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே, 'ஆக்ஸிஸ்' மொபட்டில் நின்றிருந்தவரிடம் விசாரித்தபோது, சேலம், பெருமானுார், பாரதியார் தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ், 24, என தெரிவித்தார்.
அவரது மொபட்டில் இருந்த, 3 மூட்டைகளை சோதனை செய்ததில், தலா, 50 கிலோ வீதம், 150 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. ரேஷன் கடைகளில் வாங்கி, மாவாக அரைத்து, மாட்டு தீவனத்துக்கு பயன்படுத்துவதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மொபட்டுடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை, போலீசார் கைது செய்தனர்.

