sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு அமைச்சர் நிதியுதவி

/

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு அமைச்சர் நிதியுதவி

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு அமைச்சர் நிதியுதவி

ரயில் விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு அமைச்சர் நிதியுதவி


ADDED : நவ 05, 2024 06:46 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: கேரளாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்த, சேலத்தை சேர்ந்த இரு தம்பதியரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் நிதியுதவி வழங்-கப்பட்டது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், ஆச்சாங்குட்டப்-பட்டி ஊராட்சி, அடிமலை புதுாரை சேர்ந்தவர் லட்சுமணன், 60. இவரது மனைவி வள்ளி, 51. இவரது தம்பி லட்சுமணன், 47, இவ-ரது மனைவி ராணி, 45. இவர்கள், ஆச்சாங்குட்டப்பட்டி பகு-தியில், ஓராண்டுக்கு முன்பு தோட்டவேலை செய்து வந்தனர். பின், கேரளா மாநிலம் சென்று வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்தனர். உறவினர்களான இரு தம்பதிகளும் கடந்த, 2ல், கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சொரனுார் பகு-தியில் துாய்மை பணியில் ஈடுபட்ட போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.அவரது உறவினர்கள், கேரளா சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு, நேற்று அடிமலை புதுார், அரமனுாரில் லட்சுமணன், அவ-ரது மனைவி வள்ளி இருவரின் உடலையும் தகனம் செய்தனர். அதேபோல், ராணியின் உடல் அல்லிகுட்டையில் தகனம் செய்-யப்பட்டது. அவரது கணவர் லட்சுமணன் உடல் காரைக்காடு பகு-தியில் தகனம் செய்யப்பட்டது. இரு தம்பதியினர் ரயில் விபத்தில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த துாய்மை பணியாளர் குடும்-பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின், தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார். அதற்கான காசோலையை, நேற்று சுற்-றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேரில் சென்று குடும்பத்தி-னரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, கள்ளக்குறிச்சி எம்.பி.,மலையரசன் உட-னிருந்தனர்.






      Dinamalar
      Follow us