/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் அமைச்சர் ராஜேந்திரன் காட்டம்
/
இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் அமைச்சர் ராஜேந்திரன் காட்டம்
இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் அமைச்சர் ராஜேந்திரன் காட்டம்
இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் அமைச்சர் ராஜேந்திரன் காட்டம்
ADDED : டிச 04, 2024 02:00 AM
சேலம், டிச. 4-
''தேர்தல் நெருங்கும் நிலையில், இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் அவர், எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியாமல் பொய் தகவலை கூறி வருகிறார்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த கன மழையால், அதன் மலைப்பாதையில் சில இடங்களில் மண் சரிந்து, பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை, வருவாய், மின்வாரிய துறைகள் இணைந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டன. அதை நேற்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார். கந்தம்பட்டியில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
வரலாறு காணாத அளவில் ஏற்காட்டில் மழை பெய்துள்ளது. அவை திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியதால் கரையோர பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டுவிட்டது. அதை உரிய பணியாளர்கள் மூலம் சரிசெய்து வருகிறோம்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., எல்லா இடங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவர், தன் இருப்பை காட்டி கொள்ளவே இப்படி பேசி வருகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் அவருக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் அவர், எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியாமல் பொய் தகவலை கூறி வருகிறார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும், வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்கி வருகின்றனர். அதை, இ.பி.எஸ்.,ஆல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.