ADDED : ஆக 25, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அம்மாபேட்டை போலீசில் அளித்த புகாரில், '16 வயது மகன், பிளஸ் 1 படிக்கிறார். டியுசன் சென்ற அவர், வீடு திரும்பவில்லை' என கூறியிருந்தார்.
போலீசார் விசாரணையில், மதுரையில் உள்ள நண்பரை பார்க்க சென்றதாக தகவல் கிடைத்தது. இதனால் மதுரை செல்லும் பஸ்சில் உள்ள கண்டக்டர்களின், மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில், மாணவர், பஸ்சில் பயணம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. பின் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பஸ்சில் இருந்து மாணவன் மீட்கப்-பட்டான். பின் அவனை சேலம் அனுப்பி வைத்தனர். நேற்று போலீசார், மாணவனை, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.