ADDED : அக் 29, 2026 04:02 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: சேலம் மாவட்டம் தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் மகன் ஜெயபால், 15. தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 26 காலை, மாணவர் பள்ளிக்கு செல்லாத நிலையில், வீட்டுக்கும் வரவில்லை. பெற்றோர் புகாரில், தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
தொடர்ந்து, ஆத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சியில், இரு நாட்களாக தேடினர். நேற்று, இரவு, 8:00 மணிக்கு, திருச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து மாணவரை மீட்டு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
