/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை, நிழற்கூட பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை, நிழற்கூட பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 13, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி. இவரது தொகுதி மேம்பாட்டு நிதியில், கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, ஜெயலட்சுமி நகரில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை; குதிரைக்குத்தி பள்ளத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், பஸ் நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அதில் எம்.எல்.ஏ., மணி, பணிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், விமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.