/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ., ஆபீஸ்: மக்கள் ஏமாற்றம்
/
எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ., ஆபீஸ்: மக்கள் ஏமாற்றம்
எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ., ஆபீஸ்: மக்கள் ஏமாற்றம்
எப்போதும் பூட்டியே கிடக்கும் எம்.எல்.ஏ., ஆபீஸ்: மக்கள் ஏமாற்றம்
ADDED : செப் 13, 2025 02:18 AM

வாழப்பாடி:எம்.எல்.ஏ., அலுவலகம் எப்போதும் பூட்டியபடியே உள்ளதால், பலமுறை நடையாய் நடந்தும் மனு கொடுக்க முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டசபை தொகுதியின் மையப்பகுதியான, வாழப்பாடி அடுத்த பேளூரில், அத்தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. அதில், வாழப்பாடி, ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியங்கள், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூர் டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன.
அ.தி.மு.க.,வை சேர்ந்த சித்ரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். எம்.எல்.ஏ., அலுவலகம், எந்நேரமும் பூட்டியபடியே உள்ளது. இதனால், புகார், கோரிக்கை மனுக்கள் வழங்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'வாரந்தோறும் குறிப்பிட்ட நாளிலாவது, மக்கள் மனுக்களை வாங்க, எம்.எல்.ஏ., அலுவலகம் வர வேண்டும். அவர் வரும் நாள், நேரத்தை, முன்கூட்டியே குறிப்பிட வேண்டும். அவர் இல்லாதபோது, யாரேனும் ஒருவர் மனுக்களை வாங்கி வைக்க வேண்டும்' என்றனர்.
எம்.எல்.ஏ., சித்ராவிடம் கேட்டபோது, ''அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறேன்,'' என்று மட்டும் கூறினார்.