/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.46 லட்சத்தில் திட்டப்பணி எம்.எல்.ஏ., பூமி பூஜை
/
ரூ.46 லட்சத்தில் திட்டப்பணி எம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : ஆக 31, 2025 07:41 AM
மேட்டூர்: மேட்டூர் எம்.எல்.ஏ., தொகுதி, மேம்பாட்டு திட்டத்தில், தங்க-மாபுரிபட்டணம் புதுப்பாலம் அருகே நேற்று மதியம், 10 லட்சம் ரூபாயில் பயணியர் நிழற்கூடம் கூட்ட, பூமி பூஜை விழா நடந்-தது.
இதற்கு, பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதா-சிவம் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து மேச்சேரி, மல்லிகுந்தம் ஊராட்சி, குப்பைகாளிப்பட்டியில், 7.50 லட்சம் ரூபாயில் நிழற்கூடம்; வேங்கா-னுாரில், 9.50 லட்சம் ரூபாயிலும், பள்ளிப்பட்டி ஊராட்சி காமநா-யக்கன்பட்டியில், 9.62 லட்சம் ரூபாயிலும், காக்காச்சிவளவில், 9.98 லட்சம் ரூபாயிலும், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளை தொடங்கிவைத்தார். மொத்தம், 46.60 லட்சம் ரூபாய் மதிப்பில், 5 பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. இதில் நகராட்சி, ஒன்றிய அலுவலர்கள், பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்-றனர்.

