/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடந்து சென்ற இன்ஜினியரிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு
/
நடந்து சென்ற இன்ஜினியரிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு
நடந்து சென்ற இன்ஜினியரிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு
நடந்து சென்ற இன்ஜினியரிடம் மொபைல், லேப்டாப் பறிப்பு
ADDED : அக் 19, 2024 01:13 AM
நடந்து சென்ற இன்ஜினியரிடம்
மொபைல், லேப்டாப் பறிப்பு
சேலம், அக். 19-
திருவாருர் மாவட்டம், குடவாசல், மேற்கு மாடவிலாசம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி மகன் கார்த்திக், 26. இவர், மதுரையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம்-உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறுவதை கண்காணிக்க, மின்னாம்பள்ளி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த இரு ஆண்டுகளாக தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், பணி நிமித்தமாக மதுரைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை சேலம் வந்த கார்த்திக் அதிகாலை, 4:45 மணிக்கு மின்னாம்பள்ளி சர்வீஸ் சாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூவர், அவரிடம் இருந்த மொபைல்போன், லெனோவா லேப்டாப் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது, கார்த்திக் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

