/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிஜிட்டல் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க 'மொபைல் ஆப்'
/
டிஜிட்டல் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க 'மொபைல் ஆப்'
ADDED : நவ 26, 2024 01:28 AM
டிஜிட்டல் லைப் சான்றிதழ்
சமர்ப்பிக்க 'மொபைல் ஆப்'
சேலம், நவ. 26-
ரயில்வே ஓய்வூதியர்கள், தங்களது டிஜிட்டல் லைப் சான்றிதழை, மொபைல் செயலி மூலம் சமர்பிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில்வே துறையில்
ஓய்வூதியம் பெறுவோர், தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்காக, ஆண்டு
தோறும் தங்களது 'லைப் சான்றிதழ்' சமர்பிக்க வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில், 'ஜீவன் பிரமாண்' எனும் மொபைல் செயலி உருவாக்கப்
பட்டுள்ளது.
இச்செயலியை பயன்படுத்தி, தங்களது முக அடையாளம் பதிவு செய்து, டிஜிட்டல் லைப் சான்றிதழை எளிதாக சமர்பித்து கொள்ளலாம். இதை பயன்படுத்திக் கொள்ள, ஓய்வூதியர்களிடையே, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு
வருகின்றன.
இதுகுறித்து உதவி தேவைப்படும் ரயில்வே ஓய்வூதியர்கள், 73057 45854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

