/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மத்திய சிறையில் மொபைல் டேட்டா கேபிள், சார்ஜர் பறிமுதல்
/
சேலம் மத்திய சிறையில் மொபைல் டேட்டா கேபிள், சார்ஜர் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் மொபைல் டேட்டா கேபிள், சார்ஜர் பறிமுதல்
சேலம் மத்திய சிறையில் மொபைல் டேட்டா கேபிள், சார்ஜர் பறிமுதல்
ADDED : நவ 22, 2025 01:21 AM
சேலம்,சேலம் மத்திய சிறையில், 1,200க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக, சேலம் மத்திய சிறையில் மொபைல்போன் புழக்கம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இதுவரை, 10க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய சிறை சோதனை குழுவினர், சோதனையில் ஈடுபட்டனர். இரவு 8:30 மணிக்கு, 14ம் தொகுதியின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டி அருகில் சோதனை செய்த போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட மொபைல்போன், 1, டேட்டா கேபிள், 1, ஒயர் 1 மீட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,
அதே போல 4ம் பிளாக்கில் 8வது அறைக்கு முன்புறமுள்ள பகுதியின் மேல் துாணில், மறைத்து வைக்கப்பட்ட மொபைல்போன், 1. பேட்டரி, 1, டேட்டா கேபிள், 1, சார்ஜர், 1, ஒயர் 2 மீட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல்போன், டேட்டா கேபிள், சார்ஜர், ஒயர்களை சிறை அலுவலரிடம் சோதனை குழுவினர் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிறை அலுவலர் சிவானந்தம், கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

