ADDED : நவ 12, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல்போன் திருடியவர் கைது
சேலம், நவ. 12-
சேலம், ஆட்டையாம்பட்டி மளிகை கடை தெருவை சேர்ந்தவர் குமார் மகன் கீர்த்திவாசன், 29. இவர் கடந்த, 9ல் கொண்டலாம்பட்டி, சந்தை
பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக் சீட் கவரில் மொபைல்போனை வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, மொபைல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கீர்த்திவாசன் கொடுத்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, ஜாரி கொண்டலாம்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த பூபதி, 21, என்பவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

