sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதிகளுக்கு மொபைல் தந்த சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'

/

கைதிகளுக்கு மொபைல் தந்த சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'

கைதிகளுக்கு மொபைல் தந்த சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'

கைதிகளுக்கு மொபைல் தந்த சிறை வார்டன் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 19, 2025 06:44 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மத்திய சிறை வார்டன் சண்முககுமார், 35. இவர், கைதிகளுக்கு மொபைல் போன் உள்ளிட்டவை கொடுத்ததாக புகார் எழுந்ததால், சிறை அதிகாரிகள் விசாரித்தனர். கைதி பிரகாஷிடம் விசாரித்தபோது, 'என் தம்பி, ஆட்டோ டிரைவர் வினோத் மூலம், மொபைல் போன் வாங்கி, சண்முககுமார் கைதிகளுக்கு கொடுத்தார்' என கூறினார்.

இதனால் சிறை எஸ்.பி., வினோத், நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவரை, சிறைக்கு அழைத்து விசாரித்தார். தொடர்ந்து நேற்று, சண்முக குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து எஸ்.பி., கூறியதாவது: விசாரணையில் சண்முககுமார், ஆட்டோ டிரைவரிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சண்முககுமார் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ஓராண்டில், 'ஜிபே' மூலம், பலமுறை, 15,000 முதல், 20,000 ரூபாய் வரை வந்துள்ளது. அதன்படி, 2 லட்சம் ரூபாய் வரை வந்துள்ளது. அவர், 10 கைதிகளுக்கு மொபைல் போன் கொடுத்ததும் தெரியவந்தது. இதனால் சண்முககுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். யார் யாருக்கெல்லாம் மொபைல் உள்ளிட்டவற்றை கொடுத்தார் என, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us