/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குண்டாஸ்' கைதியிடம் மொபைல், சிம் பறிமுதல்
/
'குண்டாஸ்' கைதியிடம் மொபைல், சிம் பறிமுதல்
ADDED : நவ 14, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 40. இவர் கடந்த ஆகஸ்டில், சேந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டாஸ் பாய்ந்து, சேலம் மத்திய சிறை, 19வது தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை, அவர், உணவு கூடம் அருகே சென்றபோது, சிறை சோதனை குழுவினர், சோதனை நடத்தினர். அப்போது ரமேஷ்குமார், அவரது உள்ளாடையில், 'லாவா' மொபைல் போன், பேட்டரி, சிம்கார்டு வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த குழுவினர், ரமேஷ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.

