ADDED : ஜூலை 12, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கேரள மாநிலம், பாலக்காடு, கன்னிமாரியை சேர்ந்தவர் சஞ்சீவ், 39. லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு, சேலம் வந்தார்.
சேலம், சத்திரம் அருகே வந்த போது, 3 திருநங்கையர், வாகனத்தை நிறுத்தினர். அப்போது சஞ்சீவிடமிருந்து, மொபைல் போனை பறித்துவிட்டு, மொபட்டில், 3 பேரும் தப்பினர். இதுகுறித்து சஞ்சீவ் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.