ADDED : செப் 02, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்:தாரமங்கலம்
நகராட்சியில் துாய்மை பாரத இயக்கத்தில் திடக்கழிவு மேலாண் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. அதில் 10வது வார்டான ஜலகண்டாபுரம்
பிரதான சாலை; 14வது தண்டு மாரியம்மன் கோவில் தெரு ஆகியவை, முன்மாதிரி
வார்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரு வார்டுகளிலும், சேலம்
மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக தகவல் கல்வி தொடர்பு
வல்லுனர் மரியநாதன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, 100 சதவீத
குப்பை வழங்குதல், 95 சதவீத குப்பையை தரம் பிரித்து வழங்குவதை
பார்வையிட்டார். தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. இரு வார்டிலும் திடக்கழிவு மேலாண்மை துரிதமாக
நடப்பதால், ஓரிரு நாட்களில் குப்பையில்லா நகரமாக அறிவிக்கப்படும்
என, நகராட்சி கமிஷனர் மஞ்சுளா தெரிவித்தார்.
