தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீட் தேர்வு ரத்து செய்ய ஊர்வலம், கருத்தரங்கம்

நீட் தேர்வு ரத்து செய்ய ஊர்வலம், கருத்தரங்கம்

நீட் தேர்வு ரத்து செய்ய ஊர்வலம், கருத்தரங்கம்


ADDED : செப் 02, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:மாணவி அனிதா நினைவு நாளை ஒட்டி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சேலத்தில் ஊர்வலம் நேற்று நடந்தது.

அதில், 'இனி ஒரு உயிரை இழக்க விடமாட்டோம்' என முழக்கமிட்டனர். முன்னதாக அம்பேத்கர் சிலை சந்திப்பில் தொடங்கிய ஊர்வலம், கோட்டை மைதானத்தில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து அங்கு கருத்தரங்கம் நடந்தது. மாணவர் சங்க சேலம் மாவட்ட தலைவர் டார்வின் தலைமை வகித்தார். அதில், 7.5 சதவீத இட ஒதுக்கீடை, 10.5 சதவீதமாக உயர்த்தல்; என்.டி.ஏ., அமைப்பை கலைத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் மாணவர்களின் கல்வி உரிமையும், உயிரையும் பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என வலியுறுத்தினர். இதில் மாநில மாணவர் முன்னாள் செயலர் மாரியப்பன், மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் பாலமுரளி உள்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us