/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறை கைதிகளுக்கு மனநிலை மேலாண்மை திட்டம் தொடக்கம்
/
சிறை கைதிகளுக்கு மனநிலை மேலாண்மை திட்டம் தொடக்கம்
ADDED : டிச 03, 2024 07:03 AM
சேலம்: தமிழக சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வர்தயால் உத்-தரவின்படி,
சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம், மன பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படும்
சிறை கைதிகளுக்கு, மன தைரியத்தை மேம்படுத்தும் விதமாக நேற்று மனநிலை
மேம்ப-டுத்தும் போட்டி நடந்தது. சிறை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில், துணை சிறை அலுவலர் சிவா
முன்னிலையில் போட்டிகள் துவங்கின. மன அழுத்தம் உள்ள கைதிகளுக்கு,
தேசியக்கொடி வண்ணம் தீட்டும் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற விசாரணை கைதி
செந்தில், சுரேஷ் ஆகியோருக்கு பரிசாக பிளாஸ்டிக் பக்கெட் வழங்கப்பட்-டது.மன இயல் நிபுணர் வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன், மன-நல ஆலோசகர்கள்
செல்வகுமார், மார்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.