ADDED : ஜூலை 22, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம், மொபட் திருடிய வழக்கில், தாரமங்கலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜலகண்டாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சரஸ்வதி, 24. இவர் கடந்த, 13 மதியம், ஜலகண்டாபுரம்-சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிளினிக்கிற்கு, டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். கிளினிக் எதிரே மொபட்டை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டு, திரும்பி வந்த போது மொபட்டை
காணவில்லை.
ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி, தாரமங்கலம் அருகே கே.ஆர்.,தோப்பூரை சேர்ந்த விசாத்தி, 38, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.