/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
100க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : டிச 19, 2024 01:17 AM
சேலம், டிச. 19-
திருச்சுழி, நரிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தி.மு.க., - அ.ம.மு.க.,வை சேர்ந்த, 14 ஊராட்சி தலைவர்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர், மாற்று கட்சிகளில் இருந்து விலகினர். அவர்கள் நேற்று, அ.தி.மு.க., விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் தலைமையில், சேலம் நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் நகர அவைத்தலைவர் மாதையன் தலைமையில், வன்னியர் சங்கம், பா.ம.க.,வை சேர்ந்த பலர் விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அனைவருக்கும், கட்சி சால்வை அணிவித்து, இ.பி.எஸ்., வரவேற்றார். மாநில அம்மா பேரவை இணை செயலர் ராஜவர்மன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் சுப்ரமணியன், மாநில மகளிரணி துணை செயலர் மணிமேகலை, நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலர் சந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.