ADDED : செப் 28, 2025 02:32 AM
ஆத்துார்சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, நாட்டு ரகம், செடி முருங்கை, ஒட்டு ரகம் உள்ளிட்ட முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆகஸ்டில், முருங்கைக்காய் வரத்து அதிகம் இருந்ததால், கிலோ 10 ரூபாய்க்கு விற்றது.
இந்த மாதம் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் கிலோ, 60 ரூபாய், சில்லரை விற்பனையில், கிலோ, 70 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிலோ, 80 ரூபாய், உழவர் சந்தை, சில்லரை விற்பனை கடைகளில், 90 ரூபாயாக உயர்ந்தது. புரட்டாசியில் காய்கறி தேவை அதிகம் உள்ள நிலையில், கடந்த வாரம், கிலோ 20 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 35 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல் காய்கறி விலை கணிசமான
அளவில் உயர்ந்துள்ளது.
காளான் 'கிடுகிடு'
அசைவ பிரியர்கள், புரட்டாசியில் காளான் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். கடந்த மாதம் கிலோ, 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 50 ரூபாய் உயர்ந்து, கிலோ, 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேநேரம் விற்பனை அதிகரித்துள்ளதாக,
வியாபாரிகள் தெரிவித்தனர்.