/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு
/
மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு
மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு
மாநகராட்சி இடத்தில் மசூதி; பா.ஜ., எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : ஜூலை 29, 2025 05:26 AM
சேலம்,; சேலம் மாநகராட்சி இடத்தில் மசூதி கட்டப்படுவதற்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், குகை பெரியார் வளைவு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதை மயானமாக, இஸ்லாமியர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் வீடு மற்றும் மசூதி கட்டுமான பணிகளை, சில மாதங்களுக்கு முன் துவங்கினர். அப்போது, பா.ஜ.,வினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகம் பேச்சு நடத்தி, கட்டுமான பணிகளை நிறுத்தியது.
இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் இஸ்லாமியர்கள் கட்டுமான பணிகளை தொடர்வதாக வந்த தகவலையடுத்து, பா.ஜ.,வினர் நேற்று மதியம் அங்கு திரண்டனர். இஸ்லாமியரும் குவிந்தனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரு தரப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகள், செவ்வாய்ப்பேட்டை போலீசார் பேச்சு நடத்தினர். புதிதாக கட்டடம் கட்டக்கூடாது என, பா.ஜ., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், உதவி கமிஷனர் ஹரிசங்கரி உள்ளிட்ட போலீசார், பேச்சு நடத்தி, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின், பணிகளை நிறுத்துமாறு கூறினர். அதன்படி, கட்டுமான பணிகளை இஸ்லாமியர் நிறுத்தினர். இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.