sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோமாரி தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

/

கோமாரி தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

கோமாரி தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

கோமாரி தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்


ADDED : டிச 15, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 15-

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், 6ம் சுற்றாக, அனைத்து கால்நடைகளுக்கும், கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடும் இலவச முகாம், நாளை முதல், ஜன., 5 வரை நடக்க உள்ளது.

கோமாரி நோய் கால்நடையின் இரட்டை குளம்பினை தாக்கி காய்ச்சல், கொப்பளங்களை ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று. பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு, நோய் பாதித்த மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், பண்ணைக்கழிவு மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. இதை தடுக்க, 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம், எருமை இனங்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தில், மாவட்டம் முழுதும், 4 மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, ஊராட்சி கால்நடை மருந்தகங்களில், 149 குழுக்கள் மூலம் தடுப்பூசி போடப்படும். அதனால் விவசாயிகள், அவரவர் பகுதியில் தடுப்பூசி போடும் நாளில், கால்நடைகளை அழைத்துச்சென்று தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us