ADDED : ஏப் 26, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், இரும்பாலை அருகே முருங்கப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 29. இவரது மனைவி கவுல்சல்யா, 26. இவர்களது குழந்தை கீர்த்தனா, 5. தம்பதி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடால் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 23ல் கிருஷ்ணனின் தாயை பார்த்துக்கொள்வது தொடர்பாக, மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச்செல்வதாக வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கிருஷ்ணன் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் தேடுகின்றனர்.A