/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாய், இரு மகளுடன் தீக்குளிக்க முயற்சி
/
தாய், இரு மகளுடன் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 15, 2025 01:01 AM
சேலம், சேலம் மாமாங்கம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, குலாளர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி சந்தியா, 27. இவர், தன் இரு மகள்களுடன், நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த, 5 லிட்டர் கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி கொள்ள முயன்றார்.
அதை தடுத்து, கேனுடன் பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார், அவரை எச்சரித்து அனுப்பினர். பின், மனு கொடுக்க உள்ளே சென்றவர், பாதியில் திரும்பி வந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது: வீடு மற்றும் காய்கறி கடையின் பத்திரத்தை, கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, 40 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அசல், வட்டி சேர்த்து, 25 லட்ச ரூபாயை திருப்பி செலுத்தி விட்டேன். ஆனால் நிதி நிறுவனத்தினர், தற்போது மொத்த அசலையும் செலுத்தினால் மட்டுமே, பத்திரத்தை தருவதாக மிரட்டுகின்றனர். இது தொடர்பாக, ஏற்கனவே, கலெக்டர் அலுவலகம், மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், வாழவழியின்றி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு கூறினார்.
சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.