/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளநீர் பறிக்க மரம் ஏறி விழுந்த தாய் பலி
/
இளநீர் பறிக்க மரம் ஏறி விழுந்த தாய் பலி
ADDED : மே 05, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, ரெங்கனுாரை சேர்ந்த, பெயின்டர் வெங்கடாசலம். இவரது மனைவி தாமரைச்செல்வி, 25. இவர்களுக்கு, 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனர்.
இவர்கள், சின்னமநாயக்கன்பாளையத்தில் உள்ள தாமரைச்செல்வியின் தந்தை வீட்-டுக்கு கடந்த, 30ல் சென்றனர். அப்போது குழந்தைகளுக்கு இளநீர் பறிக்க, அங்குள்ள தென்னை மரத்தில் தாமரைச்செல்வி ஏறியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.