ADDED : அக் 30, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரவிக்குமார். இவரது மனைவி புனிதா, 27. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 26ல் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், இரு குழந்தைகளுடன் வெளியேறிய புனிதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. திருவண்ணாமலையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கும் செல்லாதது தெரிந்தது. இதுகுறித்து ரவிக்குமார், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் சேலம், குகை எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த, 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த, 24ல் அவர் மாயமானார். அவரது பெற்றோர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் தேடுகின்றனர்.

