/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமியை மது அருந்த வைத்து 'தொல்லை' தந்தை புகாரில் தாய், கள்ளக்காதலன் கைது

ADDED : ஜூலை 06, 2025 01:53 AM
ஆத்துார், சிறுமியை மது அருந்த வைத்து, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, அவரது தந்தை அளித்த புகார்படி, சிறுமியின் தாய், கள்ளக்காதலனை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆத்துாரை சேர்ந்தவர், 27 வயது கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, 27 வயது பெண். இவர்
களுக்கு, 11 ஆண்டுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, 10 வயதில் மகள், 8 வயதில் மகன் உள்ளனர். பெண், திருமணத்துக்கு முன், புங்கவாடியை சேர்ந்த டிரைவர் முத்து, 33, என்பவரை காதலித்தார். பின் மீண்டும் அவருடன் பழகியுள்ளார். கடந்த
பிப்., 2ல், அப்பெண், இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, முத்துவுடன் பெங்களூரு சென்றுவிட்டார்.
சில நாட்களுக்கு முன், ஆத்துாரில் மனைவி, குழந்தைகளை, தொழிலாளி பார்த்தார். தொடர்ந்து மனைவியின் மொபைல் போனை பார்த்தபோது, அவர், முத்துவுடன் சேர்ந்து மது அருந்துவதும், மகளுக்கும் மதுவை ஊற்றிக்கொடுத்து, முத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளி, ஆத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், அவரது மனைவி, கள்ளக்காதலன் முத்துவை, 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.