/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர் வெள்ளோட்டம் நாளை மின் நிறுத்தம்
/
தேர் வெள்ளோட்டம் நாளை மின் நிறுத்தம்
ADDED : ஜூலை 06, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் புது தேர் வெள்ளோட்டம் நாளை நடக்க உள்ளது. ராஜகோபுரம் அருகே காலை, 9:00 மணிக்கு புறப்படும் தேர், மதியம், 2:00 மணிக்கு, தேர் நிலைக்கு வந்து சேரும். அதனால் முதல் அக்ரஹாரம்,
ஆனந்தா இறக்கம், லட்சுமி நரசிம்மர் கோவில் வழியே, 2ம் அக்ரஹாரம், வரதராஜ பெருமாள் கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் இறக்கம், கடைவீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகள் என, தேர் வெள்ளோட்டம் தொடங்கி முடியும் வரை, மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை, சேலம் மாநகர் மின் செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.