ADDED : நவ 20, 2024 02:01 AM
மேட்டூர், நவ. 20-
சேலம், சிவதாபுரம், திருமலைகிரியை சேர்ந்த முருகன் மகள் பாரதி, 28. இவர், மேட்டூர், சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணனை, 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். அவர்களது மகன்கள் கோபி, 12, மித்ரன், 7. ஆனால் பாலகிருஷ்ணன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
பின் பாரதி, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணிக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பாரதி, அவரது பெற்றோருக்கு போன் செய்து அழைத்தார். அன்று மாலை, அவரது பெற்றோரான முருகன், சரஸ்வதி ஆகியோர், பாரதி வீட்டுக்கு வந்தனர். வீடு பூட்டி இருந்ததால், அருகே இருந்த அவரது மாமியாரிடம் கேட்டனர்.
அப்போது, 'சொத்து பிரச்னை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவர், மொபட்டில் இரு குழந்தைகளை அழைத்துச்சென்றார். பின் வீடு திரும்பவில்லை' என கூறினார். இதனால் நேற்று, சரஸ்வதி புகார்படி, மேட்டூர் போலீசார், பாரதி, அவரது குழந்தைகளை தேடுகின்றனர்.