ADDED : செப் 17, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெருவை சேர்ந்தவர் சரத்குமார், 34. இவருக்கு திருமணமாகி சபீனா, 32, என்ற மனைவி, பிரணித் வர்ஷன், 8 வயது மகன் உள்ளனர். கடந்த, 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சபீனா, அவரது மகனும் வீடு திரும்பவில்லை.
சரத்குமார் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர் தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் ராஜசேகரன், 62. இவரது மகன் ஸ்ரீகாந்த், 26, சேலம் அழகாபுரத்தில் உள்ள மொபைல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 12ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஸ்ரீகாந்த் வீடு வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பள்ளப்பட்டி போலீசில், ராஜசேகரன் புகார் அளித்துள்ளார்.

