ADDED : ஆக 13, 2025 05:33 AM
சேலம்:சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 38. தொழிலாளி. இவரது மனைவி இந்திராணி, 26. இவர்களது மகன்கள் ஸ்ரீதரன், 6, சுதர்சன், 3. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்-தது. கடந்த, 10ல் மீண்டும் தகராறு ஏற்பட்டு, இந்திராணி, இரு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வர-வில்லை. இதுகுறித்து சுரேஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்-படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் காடையாம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த வெற்-றிவேல் மகள் ராகவி, 23. இவர், கணவர் இடையே தகராறு ஏற்-பட்டதால், அவரை பிரிந்து, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கரும்பாலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த, 8ல் வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. வெற்றிவேல் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் தேடுகின்றனர்.