/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனிமூட்டம், மழை, குளிரால் நடுங்கிச்சென்ற வாகன ஓட்டிகள்
/
பனிமூட்டம், மழை, குளிரால் நடுங்கிச்சென்ற வாகன ஓட்டிகள்
பனிமூட்டம், மழை, குளிரால் நடுங்கிச்சென்ற வாகன ஓட்டிகள்
பனிமூட்டம், மழை, குளிரால் நடுங்கிச்சென்ற வாகன ஓட்டிகள்
ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: பனிமூட்டத்துடன் மழை பெய்து குளிரும் அடித்ததால் நடுங்கியபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.
தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் முழுதும், காலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது. சற்று எதிரே வரும் வாகனங்கள் கூட, சரியாக தெரியாத நிலை இருந்தது. இதனால், 4 வழிச்சாலைகளில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடி சென்றன. இதனிடையே விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடியே சென்றனர். குறிப்பாக பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், குளிரில் நடுங்கியபடி சென்றனர். தவிர காலையில் பள்ளி, கல்லுாரிக்கு சென்ற மாணவர்கள், அலுவலகங்களுக்கு சென்ற ஊழியர்கள், குளிர் காற்றுடன் பெய்த மழையால் சிரமத்துக்கு ஆளாகினர்.