/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
/
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 02, 2025 07:26 AM
சேலம்: பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை, கடந்த டிச., 24 முதல் ஜன., 2 வரை விடப்பட்டிருந்தது. இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. அத்துடன் ஆங்கில புத்தாண்டை சொந்த ஊர்-களில் கொண்டாடிய மக்கள், மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று புறப்பட்டனர். இதனால் சேலம் மாநகரை மையமாக கொண்டு செல்லும் அனைத்து நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில், காலை, 11:00 மணிக்கு மேல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றன.
கொண்டலாம்பட்டி முதல் கந்தம்பட்டி மேம்பாலம், திருவாக்க-வுண்டனுார் மேம்பாலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா வரை, போக்-குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 3 கி.மீ.,க்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்று நின்று ஊர்ந்தபடி சென்றன. பாலத்தில் நெரிசல் ஏற்-பட்டதால், சர்வீஸ் சாலை வழியே கனரக வாகனங்கள் திரும்பி சென்று, மீண்டும் நான்கு வழிச்சாலையில் இணையும் பகுதியில், வாகனங்கள் ஒன்றையொன்று முந்த முயன்று, விபத்து அபாயம் ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது.இதுபோன்ற தொடர் விடுமுறை காலங்களில், மாநகர எல்லை-களை ஒட்டிய 4 வழிச்சாலைகளில் போக்குவரத்து போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

