/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வருக்கு ஆதரவு எம்.பி., கோரிக்கை
/
முதல்வருக்கு ஆதரவு எம்.பி., கோரிக்கை
ADDED : டிச 07, 2025 08:35 AM
பனமரத்துப்பட்டி: நிலவாரப்பட்டி ஊராட்சி ஏலக்கரட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்-டத்தில், 13.30 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது. அந்த கடையை, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின், 500 கார்டுக்கு ஒரு கடை என பிரிக்கப்பட்டது. தற்போது ஸ்டாலின் ஆட்சியில், 100 கார்டு இருந்தாலே ஒரு கடை கட்டித்தரப்படுகிறது.
'தாயுமானவர்' திட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்-றன. அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு துணை பதிவாளர் பிரபாகரன், சார் பதிவாளர் மூகாம்பிகா, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

