/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
/
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED : டிச 31, 2024 07:38 AM
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் லட்சுமி நாராயணர் கோவிலில் நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயணா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜன., 10ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, அர்ச்சனை நடந்தது. முகூர்த்தக்கால் நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ்பாபு மற்றும் உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.