/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மல்பெரி, வெண்பட்டு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
/
மல்பெரி, வெண்பட்டு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : பிப் 16, 2025 02:58 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை, 'அட்மா' திட்டத்தில், ஆட்-டையாம்பட்டி அருகே ஆர்.பொத்தம்பட்டியில், மல்பெரி சாகு-படி, வெண்பட்டு வளர்ப்பு குறித்து பயிற்சி வகுப்பு நேற்று நடந்-தது. துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
அதில் இளநிலை பட்டு ஆய்வாளர் வினித், உதவி வேளாண் அலுவலர் தனபால், மல்பெரி சாகுபடிக்கு ஏற்ற நிலம், ரகங்கள் தேர்வு, நாற்றாங்கால் அமைத்தல், குச்சி விதை நேர்த்தி, நடவு, நீர், பூச்சி, நோய் மேலாண்மை, பயிர் பராமரிப்பு, கவாத்து செய்தல், இலைகள் அறுவடை ஆகியவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம், நீர் சேகரிப்பு, மானிய திட்டங்கள், பட்டுப்புழு மனையில் கழிவு, கிருமி நீக்கம் செய்தல், கழிவை உரமாக மாற்றும் தொழில்-நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்-கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர்கள் சரஸ்வதி, தீபன் முத்துசாமி உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.