/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் மயானத்தில் கூடுதல் கட்டணம் வசூல் அ.தி.மு.க., - நகராட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 11, 2025 01:30 AM
இடைப்பாடி, :இடைப்பாடி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் பாஷா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:
அ.தி.மு.க., கவுன்சிலர் முருகன்: கமிஷனர், பொறியாளர் இல்லாமல், இந்த கூட்டம் ஏன் நடத்தப்படுகிறது. யாரிடம் கேள்வி கேட்பது. வார்டு வாரியாக இதுவரை எத்தனை தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளன என்ற விபரம் வேண்டும். இதில், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.
தலைவர் பாஷா: துணை முதல்வர், நாமக்கல் மாவட்டத்துக்கு வந்ததால், கமிஷனர், ராசிபுரம் நகராட்சிக்கு பொறுப்பு வகிப்பதால், அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டம் அதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டதால் நடக்கிறது. மேலும் எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை. எலக்ட்ரீஷியன்களை அனுப்பி, விளக்குகள் போட நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகன்: மின் மயானத்தில் சடலங்களை எரியூட்ட, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? 6 மாதங்களுக்கு முன்பே, அறிவிப்பு பலகை வைப்பதாக கூறிவிட்டு, இதுவரை ஏன் வைக்கவில்லை.
பாஷா: சடலங்களை எரியூட்ட வழங்கப்படும் தொகை கட்டுப்படியாகவில்லை என கூறியுள்ளனர். மற்ற நகராட்சிகளில் அனுமதிக்கப்பட்ட தொகை விபரத்தை கொடுத்துள்ளார்கள். பரிசீலனை செய்து அத்தொகை உயர்த்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதில், 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.